திருமாவளவனை சுத்து போட்ட IT அதிகாரிகள்.. நள்ளிரவில் ரெய்டு.. சிதம்பரத்தில் பரபரப்பு.!!
ITRaid in thirumavalavan staying house in chidambaram
சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான திருமாவளவன் தேர்தல் பரப்புரைக்காக தங்கியிருந்த வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சி தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட நடேசன் நகர் பகுதியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள வீட்டில் அவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக தங்கி உள்ளார்.
இந்த நிலையில் திருமாவளவன் பிரச்சாரத்திற்காக தங்கி இருந்த வீட்டில் பணப்பட்டு வாழ நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் திருமாவளவன் தங்கி இருந்த வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
ITRaid in thirumavalavan staying house in chidambaram