மோசடியை நியாயப்படுத்தும் முயற்சி - கருத்துக்கணிப்புகள் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் !
Its an Attempt to Determine Their Fraudulance Congress Jairam Ramesh
பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், நேற்று மாலை பல்வேறு செய்து நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. அவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் பாஜக தான் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தற்போது அரசாங்கத்தின் அடுத்த 100 நாட்களுக்கான வேலைத்திட்டம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு நடத்துகிறார்.
இது நான் திரும்பி வந்து மீண்டும் பிரதமாகப் போகிறேன் என்று கூறும் ஒரு உளவியல் விளையாட்டு. இதன் மூலம் நேர்மையான அதிகாரிகளுக்கு அவர் எச்சரிக்கை விடுக்கிறார். இந்த கருத்துக்கணிப்புகள் முற்றிலும் போலியானவை. நாங்கள் பயப்படவில்லை. ஜூன் 4ம் தேதி வரப்போகும் தேர்தல் முடிவுகள் வேறாக இருக்கும்.
காங்கிரஸ் இந்த போலி கருத்துக்கணிப்பை ஏற்கவில்லை. இவை தொழில்முறை கருத்துக்கணிப்புகள் மட்டுமே. எங்களது இந்தியா கூட்டணி 295 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெறும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே இந்தக் கருத்துக் கணிப்புகளை நாங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முறைகேடுகளை நியாயப்படுத்தும் ஒரு முயற்சியாகவே கருதுகிறோம்.
முதலில் தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். அது ஒரு சட்டபூர்வமான அமைப்பு என்பதை அடிக்கடி மறந்து விடுகிறது" என்று கூறியுள்ளார்.
English Summary
Its an Attempt to Determine Their Fraudulance Congress Jairam Ramesh