ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி! 45 நாட்களில் 36 படுகொலைகள்! அடுத்த கட்டத்திற்கு ரெடியாகும் ஜெகன்!
Jaganmohan Reddy protests in Delhi on 24th July demanding implementation of President Rule in Andhra Pradesh
ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கோரி வரும் ஜூலை 24ஆம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளதாக ஆந்திரா முன்னாள் முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் பால்நாடு மாவட்டத்தில் சமீபத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி தலைவர் ரஷீத் நடுரோட்டில் அவரது நண்பரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஷீத்துக்கும் அவரது நண்பருக்கும் முன்விரோதம் இறந்ததாக கூறப்படுகிறது. ரஷித் அவரது நண்பன் வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ரஷீத் மீது கோபத்தில் இருந்து வந்த அவரது நண்பர் ரஞ்சித் மது கடையில் பணியை முடித்துவிட்டு வெளியே வந்த போது அவரை மடக்கி அறிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்தநிலையில் ரஷீத் வீட்டிற்கு முன்னாள் முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி ரஷீத் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்ததாவது, ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சியால் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்த 45 நாட்களில் இதுவரை 36 படுகொலைகள் 300க்கும் மேற்பட்ட படுகொலை முயற்சிகள் 160 இடங்களில் தனியாரின் சொத்துக்கள் சேதம் உள்ளிட்டவை நடந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்களால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் மீது வீடு புகுந்து தாக்குதல் நடைபெற்றுள்ளது.
எனவே வரும் ஜூலை 24ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கோரி டெல்லியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பிகள் மற்றும் எம்.எல்ஏ.க்கள் ஆகியோருடன் தர்ணா போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
Jaganmohan Reddy protests in Delhi on 24th July demanding implementation of President Rule in Andhra Pradesh