#BigBreaking || ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி., சற்றுமுன் அதிரடி கட்டுப்பாடுகள் விதித்த தமிழக அரசு.!
jallikattu 2022
ஜல்லிக்கட்டு போட்டி : 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி வழங்கி தமிழக அரசு சற்று முன்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் போட்டி நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நெகட்டிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும் பார்வையாளர்களுக்கு ஒரு கட்டுப்பாட்டையும் தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த வழிகாட்டு நெறிமுறைகள் படி,
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருதுவிடும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு விழா நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 300 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
எருதுவிடும் விழாவிற்கு மட்டும் 150 வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மற்றும் பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது.
வெளியூரில் வசிப்பவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் இணைய வழி மூலமாக காண வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பார்வையாளர்கள் கண்டிப்பாக 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
நிகழ்ச்சிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்திடம் மாடுபிடி வீரர்கள் அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.
150 பார்வையாளர்களுடன் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 50% என்ற எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் விரிவான விளக்கத்திற்கு கீழ் உள்ள தமிழக அரசின் அறிவிப்பை காணவும்.,