#BREAKING : ராகுல் காந்தியுடன் கைக்கோர்க்கும் கமல்.. அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு.!  - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் பங்கேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையான தனது பாத யாத்திரையை தொடங்கினார். விலைவாசி உயர்வை கண்டித்து இந்த பாதயாத்திரையை அவர் மேற்கொண்டார்.

 அவரது பாதயாத்திரையில் பல பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சிறுவர், சிறுமியர், முதியோர் என்று அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், தற்போது ராகுல் காந்தியின் பயணத்தில் நடிகரும் அரசியல்வாதியுமான கமலஹாசன் இணைய உள்ளார். 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அழைப்பு விடுத்ததன் பேரில் டிசம்பர் 24ஆம் தேதி நடக்கும் தேச ஒற்றுமை பயணத்தில் கமல் பங்கேற்க இருக்கிறார். ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில், ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள நடை பயணத்தில் கமல் பங்கேற்க இருப்பதாக மக்கள் நீதி மைய துணை தலைவர் மவுரியா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jamal Join with rahul ganthi Yatra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->