ஜம்மு காஷ்மீர் எம்.எல்.ஏ மறைவு - பிரதமர் மோடி இரங்கல்!
Jammu and kashmir mla death prime minister modi condolence
ஜம்மு காஷ்மீரில் உள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ. தேவேந்தர் சிங் ராணா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பரிதாபாத் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்த நிலையில், அவரை மறைவிற்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஸ்ரீ தேவேந்திர சிங் ராணா ஜியின் அகால மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு மூத்த தலைவர், ஜம்மு காஷ்மீரின் முன்னேற்றத்திற்காக விடாமுயற்சியுடன் உழைத்தவர். அவர் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்,
மேலும் ஜே & காஷ்மீரில் பாஜகவை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். இந்த துயர நேரத்தில், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி என்று குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ. தேவேந்தர் சிங் ராணா சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Jammu and kashmir mla death prime minister modi condolence