திண்டுக்கல்லில் பட்டாசு கழிவுகளை அகற்றிய எம்.பி சச்சிதானந்தம்!.... தூய்மை பணியாளர்களுக்கு உதவ இளைஞர்கள் முன்வர வேண்டுகோள்! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும் தீபாவளிக்கு மறுநாள் இன்றும் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இன்றும் சில இடங்களில் பட்டாசுகள்
வெடிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாநகரில் நேற்று பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இந்த நிலையில் சாலையோரம் இருந்த பட்டாசு கழிவுகளை ஆக்கிரரும் பணியில் இன்று 2வது நாளாக மாநகராட்சி  தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மாநகராட்சி தூய்மை பணியாளருடன் இணைந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, தூய்மை பணி இயக்கத்தை துவக்கி வைத்த திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் அங்கிருந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

மேலும் விசேஷ நாட்களில் பொது இடங்களில் இருக்கும் குப்பைகளை அகற்ற தூய்மை பணியாளர்களுடன் இணைந்து பணியாற்ற பொதுமக்கள் மக்கள் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mp sachithanandam who removed firecracker waste in dindigul requesting youth to come forward to help sanitation workers


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->