ஜம்மு-காஷ்மீரில் காங்கிரசுக்கு மேலும் ஒரு பேரிடி! தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் கூட்டணி கட்சி! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த எட்டாம் தேதி ஒரே கட்டமாக எழுதப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, தேசிய மாநாடு கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களை பிடித்து வெற்றி பெற்றது.

இதில், தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி ஆறு இடங்களிலும், பாஜக 29 இடங்களிலும், மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தனர். 

ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் தேசிய மாநாடு கட்சி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக சுவையேச்சையாக வெற்றி பெற்ற நான்கு எம்எல்ஏக்கள் தேசிய மாநாட்டு கட்சிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் தேசிய மாநாடு கட்சியின் பலம் 46-வது உயர்ந்தது. இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியின் தயவு இல்லாமல் தனி பெரும்பான்மையுடன் தேசிய மாநாடு கட்சி ஆட்சி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவிய நிலையில், தற்போது கூட்டணி அமைத்திருந்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தோல்வி மட்டுமே கிடைத்துள்ளது உறுதியாகி உள்ளது.

அதே சமயத்தில் பாஜக ஹரியானா சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் 29 இடங்களில் வெற்றி பெற்று வலிமையான எதிர்க்கட்சியாக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jammu Kashmir Election result Congress


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->