நீதிமன்ற தீர்ப்பால், படுஜோரில் ஓ.பி.எஸ்.? ட்விஸ்ட் வைக்கும் முன்னாள் அமைச்சர்.. ஜெயக்குமாரால் அதிர்ச்சி.!
Jayakkumar about Court judgement
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை முடிவில் நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கப்பட்ட தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது அல்ல." என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அதிமுக ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் எந்தவிதமான ஒப்புதலும் பெறாமல் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது என்று குற்றம் சாட்டி இருந்தார்.
இதே கோரிக்கையை முன்வைத்து பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் வழக்கு தொடர்ந்தார். இது முதலில் தள்ளுபடி செய்யப்பட்டு மேல்முறையீடு செய்யப்பட்டதை தொடர்ந்து வழக்கு ஒருமாதகாலமாக நீடிக்கப்பட்டது வந்தது.
இன்று இந்த வழக்கு விசாரணை நடந்த நிலையில், இருதரப்பு வாதங்களின் முடிவில் நீதிபதி ஜி.ஜெயசந்திரன், "அதிமுகவில் ஜூன் 23க்கு முன்னர் இருந்த நிலையே நீடிக்க வேண்டும். இருவரும் சேர்ந்தே பொதுக்குழுவை கூட்ட வேண்டும். பொதுக்குழு கூட்டப்படுகிறது என்றால் 30 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். ஓ.பி.எஸ்ஸை கட்சியை விட்டு நீக்கியது செல்லாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமித்து முடிவுகளை எடுக்கலாம். " என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, இன்று நடந்த அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையில் நீதிபதி ஜெயச்சந்திரன் ஓபிஎஸ் எதிர்பார்த்த தீர்ப்பளித்ததால், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை முடிவில் நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கப்பட்ட தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது அல்ல." என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
English Summary
Jayakkumar about Court judgement