#ஈரோடு தேர்தல் பரபரப்பு : "சைவ குடும்பத்திற்கு காய்கறி.. மற்றவர்களுக்கு கறி, மீன்" ஜெயக்குமார் அதிரடி.!
Jayakkumar Pressmeet about erode by election
ஈரோடு இடைத்தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வருகின்றது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து திமுக கூட்டணி கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது. அதுபோல அதிமுகவும் தங்களுடைய வேட்பாளர் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பலரையும் வரவழைத்து பிரச்சாரத்தை செய்து வருகின்றது.
இந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நேரடியாகவும், மறைமுகமாகவும் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாகுவை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் புகார் கொடுத்துள்ளார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "திமுக ஈரோடு தேர்தலில் கோமாளித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஒட்டகம் மீது வந்து வாக்கு கேட்ட அவர்கள் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக கூட்டத்திற்கு வரும் மக்களை தடுக்க திமுக ஆங்காங்கே பந்தல்களை அமைத்து மக்களை அடைத்து வைத்து அவர்களுக்கு ₹.500 பணமும் சாப்பாடும் கொடுக்கின்றனர்.
மேலும் வீட்டிற்கு மளிகை பொருட்களை வாங்கி கொடுக்கிறார்கள். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு காய்கறிகளையும், அசைவம் சாப்பிடும் குடும்பத்துக்கு மீன், முட்டை, கறியும் கொடுக்கின்றனர். இது ஜனநாயகத்தின் மீதான அத்து மீறல். திமுக என்ன செய்தாலும் இந்த தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெறும்." என்று தெரிவித்துள்ளார்
English Summary
Jayakkumar Pressmeet about erode by election