ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றி இருக்க முடியும் - தடுத்தது யார்? - தமிழகத்தையே பதறவைத்த அறிக்கை! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் அறிக்கை படி, மூன்று விவகாரங்கள் அம்பலமாகியுள்ளது.

ஒன்று - குற்றவாளிகள் : 

சசிகலா, கே எஸ் சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இரண்டு - மரண நேரம் :

டிச.4ம் தேதி மதியம் 3.30 மணி - 3.50க்குள் ஜெயலலிதா மரணம் என 2 பேர் சாட்சியம் அளித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஆணையமும் உறுதியாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மூன்று - உயிரை காப்பற்றியிருக்கலாம் :

அமெரிக்க மருத்துவரின் ஆலோசனையை ஏற்றிருந்தால் முதல்வரின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும்.

இங்கிலாந்து மருத்துவரின் வாய்வழி கருத்தை ஏற்று, இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என அப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தும், சரிவர அவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை. ஆஞ்சியோ செய்ய ரிச்சர்ட் பீலே அறிவுறுத்தியும், சிகிச்சை அளிக்கப்படவில்லை.

ஆஞ்சியோ & அறுவை சிகிச்சை செய்ய சிறப்பு மருத்துவர்களை, மருத்துவர்கள் Y.V.C ரெட்டி & பாபு ஆப்ரஹாம் அழைத்துள்ளனர். 

ஆனால் "சில அழுத்தத்தின்" காரணமாக சிகிச்சை செய்யாமல் "காலம் தாழ்த்தி"யுள்ளனர். இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று, ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பது, அதிமுகவினரை மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்தையும் பதற வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayalalidha death case Committee shocking news


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->