ஜெயலலிதாவின் வாரிசு நான் தான்! என்னிடம் ஒப்படையுங்கள்! சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.தீபா பரபரப்பு மனு!
jayalalithaa jdeepa karnataka court
நரசிம்மமூர்த்தி என்ற சமூக ஆர்வலர் கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். அதில், 'சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த கர்நாடக உயர்நீதிமன்றம், சொத்துக்களை ஏலம் விட உத்தரவு பிறப்பித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் இதற்காக வழக்கறிஞர் ஒருவரை நியமித்து சொத்துக்களை ஏலம் விட கர்நாடகா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தீர்ப்பு வெளியாகி பல மாதம் ஆகிய நிலையில், வழக்கறிஞர் நியமிக்கப்படாமல் கர்நாடகா அரசு காலம் தாழ்த்தியது. இதனை அடுத்து கர்நாடக அரசுக்கு எதிராக நரசிம்மமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர, வழக்கறிஞரை நியமித்து கர்நாடகா அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், கர்நாடக கருவூலத்தில் உள்ள கோடிக்கணக்கு மதிப்பிலான ஜெயலலிதாவின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, ஜெயலலிதாவின் வாரிசான ஜெ.தீபா வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதை சுட்டிக்காட்டி, கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெ.தீபா மனு காரணமாக ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விடவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
English Summary
jayalalithaa jdeepa karnataka court