ஜாமீனில் வெளி வந்தார் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ..!!
Jharkhand Former CM Hemant Soren Came Out in Bail
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த முன்னாள் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. முன்னதாக ஜார்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப் பட்டார்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்தது குறிப்பிடத் தக்கது. ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
அவரை கைது செய்வதற்கு சில மணி நேரம் முன்பு அவர் தலைமறைவாகி விட்டதாக அமலாக்கத் துறையினால் அறிவிக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது. ராஞ்சியில் உள்ள 8.5 ஏக்கர் நிலத்தை, ராஞ்சியின் வருவாய்த் துறை ஆய்வாளர் ஒருவரோடு இணைந்து ஹேமந்த் சோரன் ஆக்கிரமித்துள்ளார் என்று அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.
அதன்படி ராஞ்சியில் உள்ள வருவாய்த் துறை ஆய்வாளர் பானு பிரதாப் பிரசாத் என்பவருடன் இணைந்து போலி ஆவணங்கள் தயாரித்து பல்வேறு சொத்துக்களை ஹேமந்த் சோரன் அபகரித்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டி அவரை கைது செய்தது.
அந்த வழக்கில் தான் தற்போது ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தான் கைது செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத் தக்கது.
English Summary
Jharkhand Former CM Hemant Soren Came Out in Bail