25,00,000 பேருக்கு வேலை வாய்ப்பு!...மாதம் ரூ.2100 இலவசம்!...வாக்குறுதிகளை வாரி இறைத்தது பாஜக!
Job opportunities for 25 lakh people rupees 2100 free per month bjp has made promises
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடப்பு மாதம் 20-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, அங்கு அரசியல் கட்சியினரிடையே தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.
மேலும், பல்வேறு அரசியல் கட்சியினர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்த நிலையில், தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே), தேசிய வாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ளார். அந்த வகையில், பெண்களுக்கு மாதம் ரூ.1,500 க்கு பதிலாக ரூ. 2,100 வழங்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி மற்றும் 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளது.
இதற்கிடையே, பெண்களுக்கு மாதம் ரூ.3000, அரசு பேருந்தில் இலவச பயணம் போன்ற வாக்குறுதியை காங்கிரசின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Job opportunities for 25 lakh people rupees 2100 free per month bjp has made promises