#DMK_files:: வாய் விட்ட அண்ணாமலை.."கை மாறியதா கருப்பு பணம்"..? சிக்கிக்கொண்ட பாஜக அமைச்சர்..!!
Journalist questions is BJP minister receives black money from G Square
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக தலைவர் மு க ஸ்டாலின், அவருடைய குடும்பத்தினர் மற்றும் திமுகவின் முக்கிய தலைவர்கள் சொத்து பட்டியலை வெளியிட்டார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தேசிய அளவில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
அண்ணாமலையின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை எனக் கூறி திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நஷ்ட ஈடு கோரி அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதற்கு அண்ணாமலை மான நஷ்ட வழக்கு தொடர்ந்தால் வழக்குகளை சந்திக்க தயார் என பதிலடி தந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மருமகன் நடத்தும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் வருவாய் 2019-2020இல் வெறும் 53 கோடி மட்டுமே. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் 33,000 கோடி ரூபாயாக உயர்ந்தது எப்படி?" என கேள்வி எழுப்பி பதிவிட்டு இருந்தனர்.
இந்த பதிவை ரீட்விட் செய்த ஊடகவியலாளர் அரவிந்தக்ஷன் "திமுக ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் "G square" நிறுவனத்தின் வருவாய் ரூ.33,000 கோடியாக உயர்ந்தது எப்படி என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த ரூ.33,000 கோடியில், ரூ.1237 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பெல்லாரியில் இருப்பதாக அவர் வெளியிட்ட DMK Files தெரிவிக்கிறது. அந்த சொத்து கர்நாடகா பிஜேபி அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுக்கு சொந்தமானது.
அவர் தான் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு 07-02-23 ம் தேதி ரூ.24 கோடியே 98 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளார். ஆனால், அதன் மதிப்பை தான் ரூ.1237 கோடி என அண்ணாமலை கூறுகிறார். அப்போ மீதமுள்ள ரூ.1212 கோடி ருபாய் பணத்தை ஜி ஸ்கொயர் நிறுவனத்திடம் இருந்து கருப்புப்பணமாக கர்நாடக அரசின் பிஜேபி அமைச்சர் ஸ்ரீராமுலு பெற்றுள்ளாரா ?
உண்மையில் இந்த விவகாரம் குறித்து வருமானவரித்துறை விசாரணை நடத்த வேண்டியது மிகவும் அவசியம் தானே" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Journalist questions is BJP minister receives black money from G Square