முதல்வர் குறித்து சாட்டை துரைமுருகன் பேசிய முதல் வார்த்தையை படிக்கவே கூச்சமாக உள்ளது - நீதிபதி புகழேந்தி காட்டம்.! - Seithipunal
Seithipunal


கருத்து சுதந்திரம் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா என்று, சாட்டை துரைமுருகன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

கருத்து சுதந்திரம் என்பதற்காக சமூக வலைத்தளங்களில் என்னவேண்டுமானாலும் பேச முடியுமா? என்ற, சாட்டை துரைமுருகனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், முதலமைச்சர் குறித்து அவதூறாக பேச மாட்டேன் என்று உறுதி அளித்த பின்பும், அதனை மீறும் வகையில் சாட்டை துரைமுருகன் செயல்பட்டது ஏன்? 

சாட்டை துரைமுருகன் பேசிய முதல் வார்த்தையை படிக்கவே கூச்சமாக இருக்கிறது என்று நீதிபதி புகழேந்தி தெரிவித்தார்.

முதல்வர் பற்றி அவதூறாக பேசிய புகாரில் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரிய இந்த வழக்கில், ஜனவரி 5 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

மேலும், விமர்சனம் செய்பவர்கள் சமூகத்திற்கு நலன் விளைவிக்கும் நல்ல காரியங்கள் எதையாவது செய்யலாம் என்றும் நீதிபதி புகழேந்தி கண்டிப்புடன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JUDGE PUKALENTHI SAY ABOUT SATTAI DURAIMURUGAN CASE


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->