அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் | கே.பி முனுசாமி பரபரப்பு பேட்டி!
K P munusamy Say about ADMK General Secretary Election 2023
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில், ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![](https://img.seithipunal.com/media/eps child-rqd8j.png)
அதே சமயத்தில், பொதுக்குழு தீர்மானங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்றும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தாக்கல் செய்த சிவில் மனுக்களை தொடர்ந்து விசாரிக்கலாம் என்றும், தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் சிவில் வழக்கை பாதிக்காது, என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவிக்கின்றது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கேபி முனுசாமி, "இன்று வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் 31 ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ள இயக்கத்தை போராடி எடப்பாடி பழனிசாமி இன்று மீட்டு உள்ளார்.
![](https://img.seithipunal.com/media/eps 458758.jpg)
இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் மத்தியில் சட்டப் போராட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமி மீட்டு உள்ளார். விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு முறைப்படி எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
K P munusamy Say about ADMK General Secretary Election 2023