ரூ.500 கோடி 'சந்தை முதலீடு' உள்ள பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை தேவை..! - Seithipunal
Seithipunal


வினோதமான திருமண விளம்பரம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அதாவது, ரூ.500 கோடி சந்தை முதலீடு கொண்ட மும்பையைச் சேர்ந்த ஒரு வர்த்தக குடும்பத்தில் உள்ள, தங்கள் மகளுக்கு மணமகனைத் தேடுவதாகக் திருமண வரனுக்கான விளம்பரம் போட்டுள்ளனர்.

பொதுவாக, திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது மணமகன் தேவை அல்லது மணமகள் தேவை என்ற விளம்பரம் என்றால், சம்பந்தப்பட்ட பெண்ணின் தோற்றம், கல்வி, மற்றும் தொழில் போன்ற விபரங்களை தான் பகிர்வது வழக்கமாக இருக்கிறது.

ஆனால், 'ரெடிட்' என்ற இணையதளத்தில் பகிரப்பட்ட ஒரு விளம்பரத்தில், ரூ.500 கோடி சந்தை முதலீடு கொண்ட வர்த்தக குடும்பத்தில் உள்ள 28 வயதான பெண்ணின் திருமணத்திற்கு பொருத்தமான மார்வாரி/குஜராத்தி மணமகனை எதிர்பார்ப்பதாக, வினோதமான முறையில் மணமகன் தேடி விளம்பரம் கொடுத்துள்ளனர்.

இந்த விளம்பரத்தில் 'சந்தை முதலீடு' என்ற வார்த்தை தான் பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. தற்போது இந்த விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த விளம்பரத்தை பார்த்த இணைய நெட்டிசன்கள் சும்மா விடுவார்களா என்ன? தங்கள் இஷ்டத்துக்கு தாங்கள் திருமானது தயாராக இருப்பதாக பலர் தங்கள் கருத்துக்களை கேலியாக பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A woman with a market investment of Rs500 crores needs a groom


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->