காதலர்களே உசார்; வேலூர் கோட்டைக்குள் தடை; மீறினால் கடும் நடவடிக்கை..! - Seithipunal
Seithipunal


காதலர் தினம் கொண்டார்கள் உலக முழுவது நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதம் வந்தாலே ஒவ்வொரு நாளும் காதல் ஜோடிகளுக்கு கொண்டாட்டம் தான். அந்தவகையில், நாளை காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது. 

இந்த தினத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா மலர்களை பரிமாறிக் கொண்டும், பரிசு பொருட்களை பரிமாறிக் கொண்டும், முத்தங்களை பரிமாறிக்கொண்டும் தனது காதலை வெளிப்படுத்தி கொண்டாடுவார்கள்.

பெரும்பாலும் காதலர் தினத்தில் ஜோடி ஜோடியாக இருக்கும் ஒவ்வொரு சுற்றுலா தலங்களுக்கும் செல்வார்கள். அந்தவகையில், வேலூர் கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் ஜோடிகள் அதிகளவில் செல்வார்கள்.

அங்கு தனிமையில் இருந்து காதல் ஜோடிகள் அத்துமீறி நடந்து கொள்வார்கள், அதேப்போல, சமூக விரோத கும்பல் காதல் ஜோடிகளிடம் தவறாக நடந்து கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்நிலையில்,வேலூர் கோட்டைக்குள் நாளை காதல் ஜோடிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வேலூர் போலீசார் கூறுகையில்:-

வேலூர் கோட்டையில் நாளை காதலர் தினத்தையொட்டி, கோட்டை வளாகம், கொத்தளம், பூங்கா பகுதிகளில் காதல் ஜோடிகள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. கோட்டைக்கு வரும் காதல் ஜோடிகள் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.

அத்துடன், கோட்டை கோவில் மற்றும் அருங்காட்சியகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் செல்லலாம் அவர்களுக்கு எந்தவித இடையூறும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர். இது தவிர வேலூரில் மற்ற இடங்களில் தனிமையில் அமர்ந்து பேசும் காதல் ஜோடிகளிடம் யாராவது தகராறு செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lovers are prohibited from entering the Vellore fort


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->