திருமண மண்டபத்துக்குள் நுழைந்த அழையா விருந்தாளி; உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்த மணமக்கள் மற்றும் உறவினர்கள்.. ! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அக்சய் ஸ்ரீவஸ்தவா மற்றும் ஜோதி குமாரி ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று இரவு திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் நடந்துள்ளது.

மும்முரமாக நடந்த திருமண விழாவில், அதிரடியாக அழையா விருந்தாளியாக சிறுத்தை ஒன்று மண்டபத்திற்குள் புகுந்துள்ளது. இதனை பார்த்த மணமகனும், மணமகளும் ஓடிச்சென்று காருக்குள் பூட்டிக் கொண்டனர். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

இதன் போது பயத்தில் மண்டபத்தின் முதல் மாடியில் இருந்து குதித்த ஒருவருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில், உடனடியாக போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து,  அவர்கள் விரைந்து வந்து சிறுத்தையை தேடியுள்ளனர். ஆனால்,05 மணி நேரத்திற்கு பிறகு மண்டபத்தின் முதல் மாடியில் அறை ஒன்றில் சிறுத்தை பதுங்கி இருந்தது கண்டுபிடித்தனர். 

அப்போது சிறுத்தையை பிடிக்க முயன்ற வனத்துறை அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.திருமணத்துக்கு வீடியோ எடுக்க வந்த  கேமரா மேன்கள் இரண்டு பேரும் காயமடைந்துள்ளனர்.

இறுதியாக 03:30 மணிக்கு சிறுத்தையை கூண்டு வைத்து அதிகாரிகள் பிடித்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு, திருமண நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Leopard enters the wedding hall


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->