புள்ளிவிவரம் சொல்லும் அண்ணாமலை இதை பற்றி சொல்ல முடியுமா? அண்ணாமலைக்கு சவால் விடுத்த கேஎஸ் அழகிரி.!
k s alagiri challenge to annamalai for central govt
சென்னை அருகே கல்பாக்கத்தில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி கலந்துகொண்டார்.
திருமண நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே எஸ் அழகிரி தெரிவித்ததாவது, "அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, பாஜக குறித்து கூறியது சரியாகத்தான் இருக்கும். அவருடைய கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மன்மோகன்சிங் தலைமையிலான அரசில் தமிழகத்தில்,
சேதுசமுத்திர திட்டம்,
செம்மொழியாக தமிழ் மொழியை அறிவித்தது,
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை அதிகமாக அமைக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு,
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை,
கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் என ஏராளமான திட்டங்களை தமிழகத்திற்கு காங்கிரஸ் கொண்டு வந்துள்ளது.
எல்லாவற்றிற்கும் புள்ளிவிவரங்களை அள்ளி தெளிக்கும் அண்ணாமலை, தமிழகத்திற்கு மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசால் என்ன நன்மை கிடைத்துள்ளது என்று கூற முடியுமா?
மோடி அரசால் தமிழகம் இதுவரை எந்த மாதிரியான நன்மைகளை அடைந்து உள்ளது? அல்லது எந்த நன்மையை பெறப் போகிறது? என்பதனை அண்ணாமலை கூறட்டும்" என்று கே எஸ் அழகிரி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
English Summary
k s alagiri challenge to annamalai for central govt