60+ பலி! பாமக தொடர்ந்த வழக்கில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
Kallakurichi kallasarayam case Chennai HC Judgement PMK
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கில், நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
மரணம் குறித்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
இந்த வழக்கின் விசாரணை பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அறிந்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கில் பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டம் பயந்துள்ளது. மேலும், தமிழக முழுவதும் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Kallakurichi kallasarayam case Chennai HC Judgement PMK