தமிழக அரசுக்கு குட்டு! கள்ளச்சாராயம் வழக்கை சிபிஐ விசாரணை செய்யலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷ சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கின்  விசாரணையை சிபிஐக்கு மாற்றி  சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கள்ளச்சாராய சாவு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கடந்த நவம்பர் 20-ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் அந்த தீர்ப்பில், 

* கள்ளக்குறிச்சியில் காவல்துறையினரின் கவனத்திற்கு வராமல்  கள்ளச்சாராயம்  விற்பனை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது; 
* கள்ளச்சாராய விற்பனையை தமிழக காவல்துறை கண்டும் காணாமலும் இருந்ததைத் தான் இது காட்டுகிறது; 
* கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான காவல்துறை  அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு திரும்பப் பெற்றது தவறு என்று நீதிபதிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். 

மேலும், அடுத்த இரு வாரங்களில் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. 

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சி.பி.ஐ மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இதற்க்கு பாமக, பாஜக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன.

இந்நிலையில், கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐ விசாரணை செய்ய தடையில்லை என்று கூறி, தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Kallasarayam CBI case TN Govt SC judgement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->