கள்ளக்குறிச்சி: தமிழக காவல்துறையை நாறு நாராய் கிழித்தெடுத்த உயர்நீதிமன்றம்! தீர்ப்பின் விவரம்! - Seithipunal
Seithipunal


கள்ளகுரிஸ்த்தி விஷச்சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதிகள் எழுப்பியுள்ள ஒவ்வொரு கேள்வியும் தமிழக காவல்துறையின் செயல்பாடுகளை கேள்விக்குறியாக்கும் அமையும் வகையில் உள்ளது. 

தீர்ப்பின் சில முக்கிய கேள்விகள்:

கள்ளக்குறிச்சியில் காவல் நிலையத்தில் இருந்து கல்லெறியும் தூரத்தில் தொடர்ந்து நடந்த கள்ளச்சாராயம் விற்பனையை காவல்துறையினர் எப்படி கவனிக்காமல் இருந்தனர் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழக அரசுக்கு 13.12.2023-ல் டிஜிபி எழுதிய கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், 67 பேரது உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரிதினும் அரிதான வழக்கு என கருதி சிபிஐக்கு மாற்றம் என நீதிபதிகள் விளக்கமளித்துள்ளார். 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆ? 68 ஆ? அதிலும் குழப்பமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எத்தனை முறை கைது செய்யப்பட்டாலும் தொடர்ந்து சாராயம் விற்று வந்த முக்கிய நபரான கண்ணுக்குட்டி எனும் கோவிந்தராஜின் நடவடிக்கைகளை தொடர்து கண்காணிக்காமல் போலீசார் கண்களை மூடிக்கொண்டு இருந்தது ஏன்? - என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வேறு மாநிலங்களிலிருந்து போதை வஸ்துகள் கடத்திவரப்பட்டது குறித்து சிபிசிஐடி முறையாக விசாரிக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய குற்றவாளியான கன்னுக்குட்டி தொடர்ந்து தங்கு தடை இன்றி கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்ததிலிருந்து அவருக்கும், காவல்துறையினருக்கும் தொடர்பு உள்ளது என்பதை நம்ப வேண்டியுள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சில் போலீசாருக்கு தெரிந்தே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் கள்ளச்சாராய விற்பனையை முளையிலேயே கிள்ளி இருந்தால், 67 பேரின் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி. யார் இதற்கு பொறுப்பு ஏற்கப்போகிறார்கள்? என நீதிபதிகள் வேதனையுடன் தீர்ப்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Vizhasarayam case CBI Chennai HC Judgement shocking info


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->