#BREAKING || சுமார் 1000 சவரன் நகை... கட்டுக்கட்டாக பணம்...?! ரெய்டில் சிக்கியது என்ன? அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி.!
KAMARAJAR RAID CASE
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் காமராஜர் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள காமராஜரின் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என தமிழக முழுவதும் 49 இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது காமராஜர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக எழுந்த புகாரியின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதிகாலை 5 மணி முதல் இந்த சோதனை நடைபெற்றது.
மேலும், காமராஜ், முன்னாள் அமைச்சர், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை தற்போது நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், திருவாரூர் மாவட்டம் என்பவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக ஒரு விரிவான விசாரணை பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யயப்பட்டது.
இந்த வழக்கினை தொடர்ந்து, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 49 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு தொடர்பான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ₹41.06 லட்சம் பணம், 963 சவரன் நகை சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், காலை 5.30 மணியில் இருந்து நடைபெற்ற சோதனையில் 24 கிலோ வெள்ளி பொருட்கள், ஐபோன் உள்ளிட்டவைகளும் சிக்கி உள்ளதாகவும், ₹15.5 லட்சம் கணக்கில் வராத பணம் தொடர்பான ஆவணங்கள், வங்கிப் பெட்டக சாவி, பென்டிரைவ் உள்ளிட்ட கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, "அதிமுக என்பது மாபெரும் மக்கள் இயக்கம். இந்த இயக்கத்தின் வேகத்தை எவராலும் தடுத்திட முடியாது; இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதனால் அதிமுக தொண்டர்களை தொட்டு கூட பார்க்க முடியாது" என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி அளித்துள்ளார்.