மணிப்பூரில் நடந்தது இதுதான்.!! கனிமொழி கூறிய அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் பழங்குடி அந்தஸ்து கோரிய நிலையில் குகி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே மாதம் 3ம் தேதி கலவரம் ஏற்பட்டது.

பின்னர் அது பெரிய கலவரமாக மாறியதில் மொத்த மாநிலமும் ஸ்தம்பித்தது. இந்நிலையில் கலவரத்தின் போது குகி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் பதிலளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கின. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 3 மாதங்களுக்கு பிறகு நிபந்தனைகளுடன் இணைய சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியை சேர்ந்த 20 எம்பிக்கள் குழு மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றது. அந்தக் குழுவில் தமிழ்நாட்டை சேர்ந்த திமுக மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, ரவிக்குமார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்

 

மணிப்பூர் மாநிலம் சென்ற எதிர்க்கட்சிகள் குழு இன்று டெல்லி திரும்பியது. விமான மூலம் டெல்லி திரும்பிய திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "மணிப்பூரில் இன்னும் அமைதி திரும்பவில்லை. மணிப்பூர் மாநிலம் மக்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் அமைதி திரும்பி விட்டது என கூறுவது பொய். மணிப்பூரில் நிரந்தர அமைதி உருவாவதற்கான சூழலை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும்.

மணிப்பூர் மக்கள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது காண முடிகிறது. மணிப்பூரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 2 பெண்களையும் சந்தித்தோம்.

அப்பெண்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறையினரே அவர்களை வன்முறை கும்பலிடம் ஒப்படைத்ததாகவும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். மணிப்பூரில் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்த உள்ளோம்" என டெல்லி விமான நிலையத்தில் மணிப்பூர் சென்று திரும்பிய எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanimozhi alleged central state govts do not care on manipur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->