விசாரணை வளையம் | சிக்கலில் சிக்கினாரா எடப்பாடி பழனிசாமி? - திமுக எம்பி கனிமொழி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிப்பது குறித்து, தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று, திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.,யுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழியிடம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ விசாரணை ஆணைய அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த கனிமொழி, "தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக முதலமைச்சர் அவர்கள் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த விசாரணை அறிக்கை குறித்து முழுமையாக விசாரணை செய்த பிறகு, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும், மக்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்" என்று தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று, பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து உங்களின் பதில் என்ன? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த கனிமொழி, "நீங்கள் சொல்வது நியாயமானது தான். பல தரப்புகளில் இருந்தும் வரக்கூடிய கேள்வியாக உள்ளது. இது குறித்து முதலமைச்சர் அவர்கள் விசாரணை செய்த பிறகு தான் எந்த முடிவையும் அவர் எடுக்க முடியும்" என்று கனிமொழி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanimozhi mp say about Ex CM EPS Thoothukudi isssue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->