காமராஜர் வழியில் சமுதாயத்தை உருவாக்க வேண்டும்! - திமுக எம்.பி கனிமொழியின் பேச்சு! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் வழியில் சுயமரியாதை மிக்க சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி பேசுகையில் "தன்னுடைய வாழ்நாளில் எங்குமே சாதி மதம் என்ற எந்த வித்தியாசங்களையும் பார்க்காதவர் தான் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்.

தமிழனை தமிழனாக, மனிதனை மனிதனாக மதித்தவர் தான் பெருந்தலைவர் அவர்கள். அவர்கள் வழியில் ஒரு அன்பு நிறைந்த தேசத்தை, ஒரு இந்தியாவை, தமிழ்நாட்டை உருவாக்கி காட்ட வேண்டும். எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கக்கூடிய எல்லோரும் சமமாக சுயமரியாதையோடு வாழக்கூடிய ஜாதி, மதம், ஆண், பெண் வித்தியாசம் இன்றி எல்லோரும் சமம் என்று வாழக்கூடிய சமூகத்தை உருவாக்கி காட்ட வேண்டும்" என பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanimozhi said society should be created in Kamaraj way


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->