BJP-யில் இணையுமாறு செந்தில்பாலாஜிக்கு நெருக்கடி! பரபரப்பை கிளப்பிய கபில் சிபில்! - Seithipunal
Seithipunal


அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அள்ளியின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் "செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகள் முன்பானது. சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்த 9 ஆண்டுகளில் செந்தில் பாலாஜி வருமான வரி தாக்கல் செய்துள்ளார். சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்திருந்தால் வருமான வரி செலுத்தியது எப்படி ஏற்கப்பட்டிருக்கும்? வழக்கு பதியப்பட்ட ஆண்டிலிருந்து தற்போது வரை வருமான வரி செலுத்தியதை வருமான வரித்துறை ஏற்றுக் கொண்டுள்ளது.

சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சிகளும் கூறவில்லை. வேலைக்காக பணம் கொடுத்தாக கூறும் யாரும் நேரடியாக செந்தில் பாலாஜியிடம் கொடுக்கவில்லை. அவரது உதவியாளர்கள் கார்த்திகேயன், சண்முகம் ஆகிய இருவரிடம் தான் பணம் கொடுத்துள்ளனர். அதில் ஒருவர் கூட இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்படவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கோபி, பிரபு ஆகிய இருவர் புகாரளித்தனர். அவர்களில் ஒருவர் சாட்சியாக சேர்க்கப்படவில்லை.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தான் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என அமலாக்கத்துறை விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

ஒருவர் மீது வழக்கு பதிவு செயப்பட்ட பின்னர் அவர் குற்றம் செய்தாரா? இல்லையா என்பதை விசாரணை அமைப்பு தான் நிரூபிக்க வேண்டும். வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் தற்போது அமலாக்கத்துறையிடம் உள்ள நிலையில் என்னால் சாட்சிகளை கலைக்க முடியாது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி இருக்கும் நிலையில் எங்கும் தப்பிச் செல்ல இயலாது

செந்தில் பாலாஜியால் 30 நிமிடங்களுக்கு மேல் நிற்கவே முடியாது. எங்கும் தப்பித்து ஓடாமல் செந்தில் பாலாஜி விசாரணையை எதிர் கொள்ள தயாராக உள்ளார். அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் கம்பியூட்டரில் வைக்கப்பட்டுள்ளதால் கலைக்க முடியாது" என்ன கபில் சிபில் நீதிமன்றத்தில் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வரும் செப்டம்பர் 20ஆம் தேதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

KapilSibil alleged Senthilbalaji pressured by Ed to join BJP


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->