கர்நாடக பாஜக தலைவர் சி.டி.ரவி கைது!
Karnataka Assembly BJP Leader CT Ravi Arrest
பெண் அமைச்சரை அவதூறாக பேசிய விவகாரத்தில் கர்நாடக பாஜக தலைவர் சி.டி.ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று மாலை சட்டமன்ற வளாகத்தில் வைத்து பாஜக தலைவர் சி.டி.ரவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சட்டப் பேரவையில் நடந்த விவாதத்தின் போது தன்னைப் பற்றி தரக்குறைவான கருத்துக்களைப் பயன்படுத்தியதாக கர்நாடக மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் புகாரின் பேரில், பாஜக எம்எல்சி சி.டி.ரவி கைது செய்யபட்டுள்ளார்.
"மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டாக்டர் அம்பேத்கர் குறித்து தெரிவித்த கருத்துகள் குறித்து, சட்டப் பேரவையில் நடந்த விவாதத்தின் போது, ரவி பலமுறை தரக்குறைவான கருத்துக்களைப் பயன்படுத்தியதாக எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரவியை தகுதி நீக்கம் செய்து அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் சட்டப் பேரவைத் தலைவர் பசவராஜ் ஹொரட்டியிடம் புகார் அளித்தனர்.
English Summary
Karnataka Assembly BJP Leader CT Ravi Arrest