பெரும் சர்ச்சை.. பெரியார் செங்கோலை ஏற்க கர்நாடக முதல்வர் மறுப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூகநீதி பேரவை அமைப்பினர் சுமார் 100 பேர் அந்த அமைப்பின் தலைவர் மனோகர் தலைமையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அம்மாநில முதல்வரின் அரசு இல்லத்தில் சித்தராமையாவை சந்தித்தனர். அப்போது தந்தை பெரியாரின் சிலை இடம் பெற்றிருந்த செங்கோலை முதல்வர் சித்தராமையாவிடம் வழங்கினர். ஆனால் அதை கர்நாடக முதல்வர் சித்தராமையா ஏற்க மறுத்துள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயக மரபுக்கு எதிரான மன்னர் ஆட்சி மரபை போற்றும் வகையில் செங்கோல் இருப்பதால் நாடாளுமன்றத்தில் பாஜக கட்சி சார்பில் பிரதமர் வைத்த போது காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. ஆகையால் இந்த செங்கோலை தான் வாங்கிக் கொள்ள முடியாது என சமூகநீதி பேரவை சேர்ந்த உறுப்பினர்களிடம் சித்தராமையா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பே சால்வை, மாலை போன்றவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டேன், புத்தகங்களை மட்டுமே பரிசாக ஏற்றுக் கொள்வேன் என முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தால் சமூகநீதி பேரவை அமைப்பை சேர்ந்தவர்கள் கர்நாடக முதல்வருக்கு பூக்களையும், புத்தகங்களையும் பரிசாக வழங்கியதை முதல்வர் சித்தராமையா ஏற்றுக்கொண்டார்.

இந்த சந்திப்பின்போது மதசார்பற்ற ஆட்சியை வழங்கி வரும் முதல்வர் சித்தராமையா என சமூகநீதி பேரவை உறுப்பினர்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர். அரசியல் சர்ச்சைகளை தவிர்க்க முதல்வரின் வேண்டுகோளை நாங்கள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டதாக சமூக நீதி பேரவை அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka CM refuses senkol with periyar statue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->