கர்நாடகா தேர்தல் யுத்தம் || மல்லுக்கட்டும் காங்கிரஸ்-பாஜக.. அலரும் ம.ஜ.த.. மண்டலம் வாரியாக முன்னிலை நிலவரம் இதோ..!!
Karnataka election regional base leading
கர்நாடக மாநில தேர்தல் கடந்த மே பத்தாம் தேதி நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கி ஒரு மணி நேரம் முடிந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே இழுபறி நீடித்து வருகிறது.
காங்கிரஸ் மற்றும் பாஜக மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன. கர்நாடகா தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 107 தொகுதிகளிலும், பாஜக 99 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 18 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
கர்நாடக தேர்தலில் மண்டல வாரியாக முன்னிலை நிலவரம் ::
பெங்களூர் கர்நாடகா பொருத்தவரை மொத்தம் 28 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் 11 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
அதே போன்று கிட்டூர் கர்நாடகா மண்டலத்தில் மொத்தமுள்ள 50 தொகுதிகளில் பாஜக 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் 24 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 3 தொகுதிகளிலும் முன்னிலை வைக்கின்றன.
மத்திய கர்நாடகாவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் பாஜக 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. தெற்கு கர்நாடகாவில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட மதசார்பற்ற ஜனதா தளம் பின்னடைவை சந்தித்துள்ளது. மொத்தம் உள்ள 61 தொகுதிகளில் பாஜக 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் 34 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 5 தொகுதிகளிலும், பிற கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளனர்.
கல்யாண கர்நாடகா மண்டலத்தில் மொத்தமுள்ள 41 தொகுதிகளில் பாஜக 11 தொகுதிகளிலும் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும் மதசார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. பாஜக ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட கடலோர கர்நாடக மண்டலத்தில் மொத்தம் உள்ள 19 தொகுதிகளில் பாஜக 16 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
English Summary
Karnataka election regional base leading