தவெக மீது பெரும் அவதூறு?! கைது செய்யப்பட்ட ராஜா! வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


கரூர் அருகே ஆசிரியையின் சொத்து ஆவணத்தை வைத்து வங்கி மோசடி செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி என்றும் சொல்லப்படுகிறது. ஆசிரியைக்கு தெரியாமலேயே அவரின் ஆவணங்களை வைத்து, லோன் மூலம் கார் ஒன்றை வாங்கிய ராஜா, இது குறித்து கேள்வி எழுப்பிய ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனை அடுத்து ஆசிரியை அளித்த புகாரின் பேரில் போலீசார் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில்,  சொத்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா என்பவருக்கும், தவெக கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை  என கரூர் மாவட்ட த.வெ.க தலைவர் மதியழகன் தகவல் தெரிதவித்துள்ளார். 

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "கரூர் , குளித்தலையில் மோசடி வழக்கில் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் அவர் தவெக நிர்வாகி என்ற செய்திகள் வருகின்றன.

கைது செய்யப்பட்ட ராஜாவிற்கும் தவெகவிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அவருக்கு தவெகவிலோ அல்லது விஜய் மக்கள் இயக்கத்திலோ எந்தவிதமான பொறுப்பும் வழங்கப்படவில்லை.

இதுவரை அவர் எந்த பொறுப்பிலும் இல்லை" என்று கரூர் மாவட்ட த.வெ.க தலைவர் மதியழகன் விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Tamilaga Vetri Kalagam Mathiyalagan say about raja arrest case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->