இன்று முதல் அமலுக்கு வருகிறது பொது சிவில் திட்டம் - முதலிடத்தில் உத்தரகாண்ட்.!
today uniform civil code implement in uttarkhant from today
இந்திய நாட்டிலேயே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெறுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலின்போது மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என்று பா.ஜ.க. அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது.
அதன் படி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது போல இன்று உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது.
இந்த பொது சிவில் சட்டத்திற்கான வலைதளத்தை அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைக்கிறார். அதனை அமல்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடிவடைந்த நிலையில் இன்று இச்சட்டம் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
today uniform civil code implement in uttarkhant from today