கட்டணமில்லா பேருந்து டோக்கன் - சென்னையில் 31 ஆம் தேதி வரை வழங்க ஏற்பாடு.! - Seithipunal
Seithipunal


சென்னையில், உள்ள பொதுமக்கள் பேருந்து சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தமிழக போக்குவரத்துக் கழகம் சார்பில் சில சலுகைகளும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு வரும் ஜனவரி முதல் ஜூன் வரை பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு மாதத்துக்கு பத்து டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் ஜனவரி 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. 

அடையாறு, எம்கேபி நகர், பாடியநல்லூர், குன்றத்தூர், அயனாவரம், வடபழனி உள்ளிட்ட மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை, பேருந்து நிலையம் என்று மொத்தம் 42 இடங்களில் காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து பணிமனை அலுவலகத்தில் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் டோக்கன் வழங்கப்படும். இந்தக் கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகளை புதிதாக பெற, இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று மற்றும் 2 வண்ண புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

ஏற்கெனவே திட்டத்தின் மூலம் பயன்பெற்று புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், அடையாள அட்டையுடன் தற்போதைய பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

free bus travel token provide in chennai til coming 31


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->