காஷ்மீர்  சட்டசபை தேர்தல் : காங்கிரஸ், தேசிய மாநாடு இடையே நிறைவடைந்த தொகுதிப்பங்கீடு! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீரில் அடுத்த மாதம் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக  செப்டம்பர் 18ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் செப்டம்பர் 25ம் தேதியும், 3ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1ம் தேதி வரை என 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.


மேலும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாடு கட்சிகள் இடையேயான  கூட்டணி உறுதியாகி உள்ளது. இருந்த போதிலும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில், அங்கு முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு இன்றே கடைசி நாள்.  இதனால் பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்க காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் ஆகியோர் நேற்று காஷ்மீர் சென்று, தேசிய மாநாடு தலைவர்களை சந்தித்து பேசினர். இதில் தொகுதிப்பங்கீடு இறுதியானது.

அதன்படி மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாடு கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிடுகின்றன. அதேநேரத்தில்  5 தொகுதிகளில் இரு கட்சிகளும் தனித்து களமிறங்குகின்றன. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பாந்தர்ஸ் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kashmir Assembly Election Constituency sharing completed between Congress National Conference


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->