அதிமுகவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலையீடு உள்ளது - கே.சி. பழனிச்சாமி.! - Seithipunal
Seithipunal


அதிமுக இதுவரையில் சந்திக்காத வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளதாக அதிமுக முன்னாள் நிர்வாகி கே‌.சி‌. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் நேற்று செய்திகளை சந்தித்து பேசிய கே.சி. பழனிச்சாமி, இதற்கு முன் எம்ஜிஆர், ஜெயலலிதா தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் அடுத்தடுத்த தேர்தலில் வெற்றி பெற்றனர். ஆனால், ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக ஆட்சியில் இருந்தபோது எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு சந்தித்த ஊரக உள்ளாட்சி தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் என அடுத்தடுத்த தொடர் தோல்வி சந்தித்து வருகிறது.

அதிமுக ஆட்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலையீடு உள்ளது. அதிமுக பற்றி பேசுவதற்கு அண்ணாமலை யார்? கட்சியிலிருந்து அனைவரையும் மீண்டும் ஒன்று சேர்த்து எடப்பாடி ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க வேண்டும். அதேபோல் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பெரிய அளவில் அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்புக்கு நல்ல தீர்ப்பு கொடுத்திருக்கலாம். ஆனால் மக்கள் மத்தியில் வெற்றி பெற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். பொதுக்குழுவையும் இரட்டை தலைமையையும் கலைத்து எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் ஓராண்டிற்குள் உட்கட்சி தேர்தல் நடத்தி அதிமுகவில் சீனியாரிட்டிக்கு முக்கியத்துவம் அளித்து தொண்டர்கள் தேர்வு செய்யும் வகைகள் தலைமை தேர்வு இருக்க வேண்டும். அதிமுக உன் கட்சி விவகாரத்தில் அண்ணாமலை தலையீடு இல்லாமல் பிரதமர் தடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KC palanisamy speech about erode by election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->