ரூ.3500கோடி வருவாய்! இளைஞர்களின் எதிர்கால சீரழிப்பு! பரபரப்பை கிளப்பிய ஜெய்ராம் ரமேஷ்! - Seithipunal
Seithipunal


இளைஞர்களின் எதிர்காலத்தை வைத்து என்.டி.ஏ ரூ. 448 கோடி லாபம் பார்த்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு பல்கலைக்கழக நுழைவு தேர்வு Cuet, பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

மத்திய பாஜக அரசால் கடந்த 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தேசிய தேர்வு முகமை அமைப்பு இது வரை நடத்திய தேர்வுகளில் இருந்து கட்டணம் மூலமாக  ரூ. 3,512.98 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இந்த தகவலை மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா  மஜும்தார் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சியூஇடி பல்கலைக்கழக நுழைவு தேர்வுகளுக்குப் பிறகு தேசிய தேர்வு முகமையின் வருமானம் 78% அதிகரித்துள்ளது.  2021-22 ஆண்டில் ரூபாய் 490 கோடி ஈட்டிய நிலையில் 2022 - 23 ஆண்டு கால கட்டத்தில்  ரூ. 873 கோடி வருவாய் ஈட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து காங்கிரஸ் எம்பி ஜெயராம் ரமேஷ்  தெரிவித்துள்ளதாவது, நீட் தேர்வு முகமை மையமாக தேசிய தேர்வு முகமை உள்ளது. அது மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒரு அங்கம். ஆனால் தனது பணிகளை தனியார் வியாபாரிகளிடம் ஒப்படைத்து செல்கிறது.

தேசிய தேர்வு முகமையானது தற்போது மகா மோசடி நடைபெற்ற மத்திய பிரதேச அரசு பணியாளர்கள் தேர்வாணையத்திற்கு தலைமை தாங்கி ஒருவரின் தலைமையில் உள்ளது.

தானாகவே தேர்வு நடத்தும் அளவுக்கு அதன் திறமையை தேசிய தேர்வு முகமை மேம்படுத்தவில்லை. மில்லியன் கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை வருவாயீட்டும் நடவடிக்கையாக மோடி அரசு சீரழித்து  இருப்பது தெளிவாக தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Keeping the future of the youth, NDA Rs 448 crore profit


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->