பிரதமர் மோடி பேச்சுக்கு கெஜ்ரிவால் பதிலடி! - Seithipunal
Seithipunal



பிரதமர் மோடிஜி தனது 43 நிமிட உரையில் 39 நிமிடங்கள் டெல்லி மக்களையும், அவர்களால் தேர்வு செய்யப்பட்ட அரசையும் சபிக்கவே செலவிட்டார்' என என்று அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

டெல்லியில் நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டங்கள் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நேற்று பிரதமர் மோடி  தொடங்கி வைத்தார். மேலும் அசோக் விஹார் பகுதியில் உள்ள ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்புகளை தகுதியான பயனாளிகளுக்கு சாவிகளை மோடி வழங்கினார்.

அப்போது விழாவில் பேசிய பிரதமர் மோடி , எனக்காக நான் மாளிகை கட்டியிருக்க முடியும், ஆனால் இதுவரை வீடு கட்டிக்கொண்டது இல்லைஎன்றும்  மக்களுக்கு வீடு கொடுப்பதே எனது கனவு என்றும் ஏழைகளுக்காக 4 கோடி வீடுகள் கட்டியுள்ளேன் என்றும்  வளர்ச்சியை பற்றி பேசி ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி ஊழலில் ஈடுபட்டு வருகிறது. டெல்லி மக்கள ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்து தங்களை விடுவிக்க முடிவு செய்துவிட்டனர். கல்விக்காக அளிக்கும் சமக்ர சிக்ஷா நிதி பாதியை கூட டெல்லி அரசு செலவழிக்கவில்லை. டெல்லி அரசு 10 ஆண்டுகளில் கல்விக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது என பேசியிருந்தார் பிரதமர் மோடி .

பிரதாமாரின் இந்த பேச்சுக்கு  கெஜ்ரிவால் பதிலடி கொடுத்து உள்ளார். அவர் கூறும்போது, 'மோடிஜி தனது 43 நிமிட உரையில் 39 நிமிடங்கள் டெல்லி மக்களையும், அவர்களால் தேர்வு செய்யப்பட்ட அரசையும் சபிக்கவே செலவிட்டார்' என ஆவேசமாக சாடினார். மேலும் பேசிய அவர், 'டெல்லியில் ஆம் ஆத்மி அரசு செய்த பணிகளை பட்டியலிட 2 அல்லது 3 மணி நேரம் போதாதுஎன்றும்  மறுபுறம் மத்திய பா.ஜனதா அரசு இங்கே எதுவும் செய்யவில்லை. என்றும் அப்படி எதுவும் செய்திருந்தால், அதைப்பற்றி மோடி பேசியிருப்பார், இப்படி சாபம் போட்டிருக்கமாட்டார்' என்று குற்றம்சாட்டினார் .

மேலும் தனக்காக வீடு கட்டாமல், நாட்டு மக்களுக்காக வீடு கட்டி வருவதாக பிரதமர் மோடி கூறியது குறித்து பேசிய கெஜ்ரிவால் ரூ.2,700 கோடியில் வீடு, ரூ.10 லட்சத்தில் உடை, ரூ.8,400 கோடி விமானத்தில் பயணிப்பவர் இதைப்பற்றி பேசுவதில் நியாயம் இல்லை' கடுமையாக பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kejriwal responds to PM Modi's remark


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->