#பெரம்பலூர் || காதலர் தினத்தில் சிறப்பான சம்பவம் செய்த ஹரிப்பிரியா.! கதிகலங்கிப்போன காதலன்., பாதுகாப்பு பணியில் போலீசார்.!
kerala girl protest in perambalure
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த காதலன், தன்னை காதலித்து திருமணம் செய்ய மறுத்ததால், கேரளாவை சேர்ந்த இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி அடுத்துள்ள கீழ சீனிவாசபுரத்தில் சேர்ந்தவர் முத்துக்குமார். 25 வயதாகும் இவரின் வீட்டுக்கு நேற்று இரவு கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஹரிப்பிரியா (25 வயது) என்ற இளம்பெண் வந்து இருந்தார்.
அப்போது, முத்துக்குமார் தன்னை திருமணம் செய்துகொள்ள கோரி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அரும்பாவூர் காவல் நிலைய போலீசார், அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், முத்துக்குமாரும் ஹரிப்பிரியாவும், கிர்கிஸ்தான் நாட்டில் ஒன்றாக எம்பிபிஎஸ் படித்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது.
இதன் பின்னர் இந்தியா திரும்பிய இருவரும், ஒன்றாக கர்நாடக மாநிலம், பெல்லாரியில் உள்ள ஒரே வீட்டில் தங்கி கொண்டு, அங்குள்ள சஞ்சீவன் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், முத்துக்குமார் தங்களது வீட்டில் காதலை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று காரணம் காட்டி, ஹரிப்பிரியாவை திருமணம் செய்யாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஹரிப்பிரியா கேரளாவில் இருந்து நேரடியாக முத்துக்குமார் வீட்டுக்கு வந்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து போலீசார் முத்துக்குமாரின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதே சமயத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹரிபிரியாவுக்கு, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரும், சமூகப் பாதுகாப்பு அதிகாரிகளும் தற்போது பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
தனி ஒரு பெண்ணாக காதலித்த நபரை கரம் பிடிக்க, காதலர் தினமான இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹரிப்பிரியா குறித்த செய்திகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
kerala girl protest in perambalure