ராகுல் நேருவின் பேரனா? டி.என்.ஏ டெஸ்ட் எடுங்க.. வெடித்தது புதிய சர்ச்சை.!! - Seithipunal
Seithipunal


ராகுல் காந்தி இரண்டாம் தர குடிமகன் 

நாடு முழுவதும் மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இரண்டாம் கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் அரசை சுயேட்சை எம்.எல்.ஏ பி.வி அன்வர் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

அதன்படி கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய நீலம்பூர் எம்எல்ஏ பி.வி அன்வர் "ராகுல் காந்தியின் தொகுதியான வயநாடு பகுதியைச் சேர்ந்தவன் தான் நான்.. அவரை காந்தி என்ற பெயரைச் சொல்லி அழைக்க முடியாது. அவர் அந்த அளவுக்கு கீழ்த்தனமான குடிமகனாக மாறிவிட்டார்.. காந்தியின் பெயரை பயன்படுத்த ராகுலுக்கு தகுதியே இல்லை.. நான் மட்டுமல்ல கடந்த சில நாட்களாக நாட்டு மக்களும் இதை தான் கூறி வருகிறார்கள். 

நேரு குடும்பத்தில் இருந்து இப்படி ஒரு நபரா? நேருவின் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் இப்படி பேசுவார்களா..? எனக்கு சந்தேகமாக உள்ளது. ராகுல் காந்திக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஜவஹர்லால் நேருவின் பேரன் என்று சொல்லிக் கொள்ள ராகுல் காந்திக்கு எந்த உரிமையும் இல்லை. மோடியின் ஏஜென்டாக இருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த விவகாரம் கேரள அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala mla says dna test need to Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->