சொல்லுமா உங்களுக்கு என்ன பிரச்சனை? கிராம சபை கூட்டத்தில் மக்கள் உடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடல்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.

இதில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பள்ளிகளுக்கான மேலாண்மை குழு அமைக்கப்பட்டது‌ குறித்து தெரியுமா? என்று, கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் செய்தார்.

மேலும், குடிநீர், ரேசன் பிரச்சினைகள் குறித்து கிராம மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

பயிர்க்கடன், ரேசன் பொருட்கள் முறையாக கிடைக்கிறதா? நீங்கள் கடன் வாங்கியுளீர்களா? என்று கிராம சபை கூட்டத்தில் மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி,மக்களின் பதிலையும் கேட்டறிந்தார்.

சொல்லுமா உங்களுக்கு என்ன பிரச்சனை? என்று ஒவ்வொருவரிடமும் நேரடியாக நடந்து சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி, மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும், மக்கள் வைத்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று, கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kirama Sabai Kottam CM Stalin Speech


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->