அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு-ரூ.142.68 கோடி மதிப்பீட்டில் 19 புதிய பேருந்து நிலையங்கள்; கே.என் நேரு அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்  கே.என்.நேரு 19 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். விவாதங்கள் மீது பதிலுரை வழங்கி அமைச்சர் இது குறித்து மேலும் கூறியதாவது:-

கும்பகோணம் மாநகராட்சி, அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர் ஆகிய நகராட்சிகளில் ரூ.142.68 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், பாலப்பள்ளம், நாட்டரசன்கோட்டை, புதுப்பாளையம், ஆரணி, குன்னத்தூர், உடன்குடி, ஏர்வாடி, கும்மிடிப்பூண்டி, பரமத்தி, திருபுவனம், பருகூர் ஆகிய 11 பேரூராட்சிகளிலும் ரூ.49 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். என்றும் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து அம்மா உணவகங்கள் குறித்து பேசிய அவர், எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் நிறுத்தப்படவில்லை என்றும், அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மழைக்காலத்தில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

KN Nehru announces allocation of Rs 40 crore for the improvement of Amma Unavagam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->