#BigBreaking || கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்., சசிகலாவுக்கு சற்றுமுன் சம்மன்., நாளை நடக்கிறது விசாரணை.!
kodanadu issue sasikala april
கடந்த 2017 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி சம்பவம் அரங்கேறியது. இதில் அந்த எஸ்டேட்டின் காவலாளி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீசார் சயான், வாளையாறு மனோஜ் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிர் இழக்கவே, இந்த வழக்கு விசாரணை வேறுவிதமாக மாறியது.
மேலும், தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இந்த கோடநாடு கொலை, கொள்ளை சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது. உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரின் உறவினர் ரமேஷ் ஆகியோர் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினர்& தனியார் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான விவேக் ஜெயராமன் ஆகியோர் இடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், கடந்த ஜனவரி மாதம் தீபு, சதீசன், ஜம்சீர் அலி, பிஜின், ஜிஜின் ராய் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை சசிகலாவிடம் விசாரணை நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
kodanadu issue sasikala april