#சென்னை || விசாரணை கைது போலீசார் தாக்கியதால் இறக்கவில்லை - சென்னை  வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு விளக்கம்.! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே உள்ள அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் அப்பு என்கின்ற ராஜசேகர். இவர் மீது திருட்டு, கொலை உள்ளிட்ட 27 குற்ற வழக்குகள் பல்வேறு பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. 

ஒரு திருட்டு வழக்கில் விசாரிப்பதற்காக ராஜசேகரை கொடுங்கையூர் காவல் துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். காலை அவரிடம் இருந்து திருட்டு நகைகளை பறிமுதல் செய்வதற்காக காவல்துறை ராஜசேகரை வெளியே அழைத்து வந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். 

உடனடியாக அவரை காவல்துறையினர் கொடுங்கையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினார்.

இதையடுத்து காவல்துறையினர் சேகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், உயிரிழந்த ராஜசேகரின் உடலில் 4 காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று, சென்னை  வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு பேட்டி அளித்துள்ளார்.

அவரின் அந்த பேட்டியில், " ராஜசேகரை போலீசார் கைது செய்து 10 மணி நேரம் தான் காவலர்கள் வசம் இருந்தார் எண்டுறம், அவர் மெது இருந்த 4 காயங்களும் 18 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்கு முன்பான காயங்கள் என்றும் சென்னை  வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு விளக்கமளித்துள்ளார்.

மேலும், ராஜ சேகரை காவலர்கள் தாக்கவில்லை என்றும், காவல் சித்ரவதை நடைபெறவில்லை காவல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kodungaiyur lock up death case issue june 2022


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->