ஆ ராசாவால் சிக்கலில் சிக்கிய ஸ்டாலின்! இந்துக்களே வெளியேறுங்கள் - பரபரப்பு பேட்டி.!
Kovai BJP GK Nagaraj Complaint Against A Rasa
இந்துக்களை கேட்கவே காதுகூசும் வகையில், நீ இந்து என்றால் விபச்சாரியின் மகன் என்று விமர்சித்த ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேsண்டுமென்று கோவை மாநகர் பாஜக சார்பில், கோவை மாநகர காவல்துறை ஆணையருக்கு புகார் மனு கொடுக்கப்பட்டது.
புகார் மனு அளித்தபின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக விவசாய அணியின் மாநில தலைவர் G.K.நாகராஜ் தெரிவித்ததாவது, "ஆ.ராசா என்கிற குள்ளநரித்தனமிக்க நயவஞ்சகரின் பேச்சு பிரிவினைவாதத்தை தூண்டுகிறது. தெரிந்தே திட்டமிட்டே 85% வாழும் இந்துக்களை விமர்சிக்கும் தைரியத்தை அவருக்கு கொடுத்தது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.
தலித் என்ற போர்வையில் இருந்துகொண்டு தன்னை மிரட்டினால், தட்டிக்கேட்டால் PCR சட்டம் தன்னை பாதுகாக்கும் என்ற தைரியம். வாக்குவங்கிகாக அந்நிய மதத்தை ஆதரித்து, அரவணைத்து மக்களிடையே பிரிவினையை தூண்டி, அரசியல் ஆதாயம் தேடும் இவர் வேஷத்தை வெளிப்படுத்த வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது.
இவர் பேசிய பேச்சுக்கு இந்துக்களிடம் பகிரங்க பாவமன்னிப்பு கேட்காமல், இனி இவரை நீலகிரி தொகுதிக்குள் அனுமதிக்க முடியாது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இவர் மீது நடவடிக்கை எடுக்க தவறினால், ஆ.ராசா இந்துக்களை இழிவுப்படுத்தி பேச முதல்வர் தூண்டுகோலாக இருந்தார் என்பது உண்மையாகிவிடும்.
இவருடைய பேச்சு பிரிவினையைத் தூண்ட, அரசியல் ஆதாயம் தேட திட்டமிட்ட சதி. திமுகவிலிருக்கும் இந்துக்கள் ஆ.ராசா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியை விட்டு வெளியேற வேண்டும். அதுவே ஒரு தன்மானமிக்க உண்மையான மனிதப்பிறவிக்கு அடையாளம்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி கோவில், கோவிலாகச் சென்று வழிபாடு செய்கிறார். ஆ.ராசாவின் பேச்சு அனைத்து இந்துக்களையும் கொச்சைப்படுத்தியுள்ளது.
ஆ.ராசா மன்னிப்பு கேட்காவிட்டால் கோவை விமானநிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்க மாட்டோம். கடுமையான ஜனநாயகப் போராட்டத்தை மேற்கொள்வோம்" என்று நாகராஜ் தெரிவித்தார்.
English Summary
Kovai BJP GK Nagaraj Complaint Against A Rasa