அதிமுக என்ற கட்சியே இருக்காது..!! கோவை செல்வராஜின் பரபரப்பு பேட்டி..!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ் சமீபத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில் கோவை திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது பேசிய அவர் "அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சிகளில் பொருத்தப்பட்ட எல்.இ.டி விளக்குகள், குப்பை வண்டிகள் கொள்முதல் போன்றவற்றில் பல்லாயிரம் கோடி ரூபாயை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஊழல் செய்துள்ளார்.

அவர் செய்த ஊழல் பட்டியலை லஞ்ச ஒழிப்புத்துறையிடமும் தமிழக முதல்வரிடமும் விரைவில் கொடுக்க உள்ளேன். அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழலால் அதிமுக என்ற கட்சியே இல்லாமல் போய்விடும். கோவை அன்னூர் பகுதியில் உள்ள தரிசு நிலங்களை மட்டுமே தொழில் பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும். விவசாய நிலங்களில் கையகப்படுத்தப்படாது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர் விவசாயிகளின் பாதுகாவலனாக விளங்குகிறார்" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai Selvaraj said AIADMK will not exist


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->