பட்டியல் வெளிய வந்துடும் - எடப்பாடி பழனிசாமிக்கு பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஓபிஎஸ் தரப்பு.! - Seithipunal
Seithipunal


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது,

"துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை தவறாக கொச்சைப்படுத்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

புரட்சித்தலைவி அம்மாவால் ஓரங்கட்டப்பட்டவர் இந்த கேபி முனுசாமி. அவருக்கு இரண்டாம் கட்ட தலைவராக வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவர் ஓ பன்னீர்செல்வம். ஆனால் ஓ பன்னீர்செல்வத்தையே அதிமுகவில் உழைக்கவில்லை என்று சொல்லி வருகிறார்.

புரட்சித்தலைவி அம்மாவிடம் 'விசுவாசம் மிக்க ஒரு தொண்டன்' என்ற பட்டத்தை பெற்றவர் ஓ பன்னீர்செல்வம். அவரைப் பற்றி பேச யாருக்கும் தகுதி கிடையாது.

எடப்பாடி பழனிசாமி இத்துடன் அனைத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவருடைய ஆட்சியில் நடைபெற்ற ஊழல் பட்டியலை வெளியிடுவேன்.

கடந்த தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான். சசிகலா தற்போது கட்சியின் உறுப்பினர். எப்போதும் போல அவர் இருப்பார். அவரை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை" என்று கோவை செல்வராஜ் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KOVAI SELVARAJ SAY ABOUT ADMK EPS AND KPM


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->