தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி வெளியான தகவல்.! இதெல்லாம் கேவலம் : ஓபிஎஸ் தரப்பில் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


வாக்காளர் பட்டியலுடன், ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக இன்று நடந்த தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், ஓபிஎஸ் சார்பாக கோவை செல்வராஜ் கலந்து கொண்டார்.

அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் அமர்ந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்ட ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமனும் தேர்தல் ஆணையத்திற்கு வந்தனர்.

ஜெயக்குமார் வந்ததும், ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் அருகில் இருந்த அதிமுக என்ற பெயர் பலகையை தனது பக்கம் நகர்த்தி வைத்து கொண்டார்.

இதுகுறித்து ஜெயக்குமார் தெரிவிக்கையில், "அவர் எந்த கட்சி சார்பாக கலந்து கொண்டார் என்று தெரியவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் அறிவித்தபடி நாங்கள் இருவர் கலந்து கொண்டோம். அதிமுக என்றால் அது நாங்கள் தான்" என்று தெரிவித்தார்.

ஜெயக்குமார் குறித்து கோவை செல்வராஜ் தெரிவிக்கையில், "அவர் எந்தக் கட்சி என்று ஜெயக்குமார் கூறியது பற்றி எனக்கு தெரியாது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்க சொல்லுங்கள். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பெயர் இணைய ஒருங்கிணைப்பாளர் என்று தான் பதிவாகி இருக்கிறது.

அதிமுகவின் பெயர்பலகையை ஜெயக்குமார் எடுக்கவில்லை. அவர் கையை வைத்து நகர்த்தி வைத்தார். தரம் இல்லாத செயல்களை செய்கின்றவர்களை நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம். அது ஒரு கேவலமான செயல். ஒரு அமைச்சர் ஆக இருந்தவர், எம்எல்ஏ இருந்தவர் இதெல்லாம் செய்வது கேவலமாக இல்லையா?

நான் தனியாக கலந்து கொண்டது, சிங்கம் சிங்கிளாக தான் வரும். நான் ஒரு ஆளே போதும், அவர்களை அடக்குவதற்கு நான்மட்டும் போதும்" என்று கோவை செல்வராஜ் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai selvaraj say about admk jeyakumar and eps issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->