அதிமுகவை அழிப்பது ஓபிஎஸ்-ன் வலது கரம் தான் - கோவை செல்வராஜ் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளர் கோவை செல்வராஜ், ஓபிஎஸ் அணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதிமுக என்ற பெயரில் தங்கள் சுயநலத்துக்காக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சண்டை போட்டு வருகின்றனர். சுயநலத்திற்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க நான் விரும்பவில்லை என்று கோவை செல்வராஜ் அதற்கான காரணமாக தெரிவித்து இருந்தார்.

கோவை செல்வராஜன் இந்த திடீர் அறிவிப்பும், அவருடைய கருத்தும், அவர் அதிமுகவிலிருந்து முழுவதும் விலகுவதாகவே தெரிகிறது. மேலும் கோவை செல்வராஜன் இந்த அறிவிப்புக்கு பின்னணியில் திமுக அல்லது பாஜக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் பிரபல மாலை நாளேடு ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கோவை செல்வராஜ், "ஓபிஎஸ், இபிஎஸ் உடன் இனியும் பணியாற்ற விரும்பவில்லை. ஓபிஎஸ் அணியில் இருந்து மட்டுமில்லை. அதிமுக.,வில் இருந்தே விலகுகிறேன். 

அதிமுக அழிவதற்கு முக்கிய காரணம் வைத்திலிங்கம். அவர் செய்யும் தவறுகளை ஓபிஎஸ் தட்டிக்கேட்க பயம் கொள்கிறார். மேலும் ஓபிஎஸ், வைத்திலிங்கம் சேர்ந்து கொண்டு தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பதவிகளை கொடுத்து வருகின்றனர்.

ஓபிஎஸ் என்னை நீக்கவில்லை. கடந்த 2 மாதங்களாகவே நான் தான் ஒதுங்கி இருந்தேன். நேற்று என்னிடம் கோவை மாவட்டத்திற்கு வேறு பொறுப்பாளரை நியமிக்கட்டுமா? என்று அவர்கள் கேட்க, தாராளமாக நியமித்து கொள்ளுங்கள். எனக்கும், உங்களுக்கும் எந்த தொடர்பு இல்லை என்றேன். தமிழகம் முழுவதும் உள்ள எனது ஆதரவாளர்களை கலந்து ஆலோசனை செய்த பின் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வேன்" என்று கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai Selvaraj Say about ops and vaithiyalingam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->